8 Jan 2012

முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதை திசை திருப்புவதா? அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை நம்ப வேண்டாம் - நகராட்சித் தலைவர் விளக்கம்..

கீழக்கரையின் மக்கள்  நலப் பணிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை சென்று பல அமைச்சர் பெருமக்களையும்,  துறை அதிகாரிகளையும் சந்தித்து கீழக்கரை திரும்பி இருக்கும் நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரியா அவர்களை இனைய ஆசிரியர் ஹுசைன் மற்றும் துனை ஆசிரியர் உஸ்மான் ஆகியோர் இன்று சந்தித்து உரையாடியபோது, சில கேள்விகளை தொடுத்து அதற்கான விளக்கத்தையும் கேட்டுப் பெற்றோம்.

சமீபத்தில் கீழக்கரை டைம்ஸ் இனைய தளத்தில் , 20.12.2011 அன்று நகராட்சியில் சில திட்டங்களுக்காக 41.5  இலட்சம் மதிப்புள்ள பணியில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதனை ரீ டெண்டர் விட வேண்டும் என்றும்  நகராட்சி கமிஷனருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதற்கான நகராட்சி கமிஷனரின் பதிலில் “ ஆன் லைன் டெண்டரில் முறைகேடு எப்படி நடக்கும் என்று கூறியதை வெளியிட்டு இருந்தார்கள், இது பற்றி உங்களின் விளக்கம் என்ன எனக்கேட்டோம்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் “   அந்த திட்ட பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டது உணமைதான், ஆனால் எந்த விதமான விதிமீறல் நடந்தது என்று யாராலும் சொல்ல முடியுமா?  உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தம் கோரி திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கிறபோது, சிண்டிகேட் அமைத்து டெண்டர் இல்லாமலேயே வேலை ஒப்பந்தங்களைப் பெறுகிற முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான்  ஆன்லைன் மூலமாக அதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. நகராட்சியின் மீது குற்றம்சாட்டியவர்கள் ஒரு ஒப்பந்ததாருக்கு அந்த பணியை அளிக்க சிபாரிசு செய்தார்கள், அது சாத்தியம் இல்லை என தெரிந்ததும் நகராட்சியின் மீது குற்றம் சாட்டுகிறார்கள், 

அந்த குற்றச்சாட்டு ஒரு அப்பட்டமான பொய், மேலும் ஒப்பந்தம் கோரும் முன்பு உறுப்பினர்களுக்கோ, சேர்மனுக்கோ தனியாக தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி ஒன்றும் இல்லை, நகராட்சியின் நோட்டிஸ் போர்டில் பொதுவாக ஒட்டினாலே போதும், அதற்கான நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள், வேலைக்கான உத்தரவின் போது மட்டுமே அதற்கான கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆகவே சில தனிப்பட்ட நபர்களின் விருப்பத்துக்கு விதியை மீறி ஒத்துழைக்கவில்லை என்பதால் நகராட்சியின் செயல்பாட்டில் முறைகேடு நடப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்,  மேலும் இதில் விளக்கம் வேண்டுமென்றால் நகராட்சி ஆனையரிடமே கேட்கலாம், ஆகவே” இந்த பொய் குற்றச்சாட்டை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்”  மக்கள் பணியில் என் உறுதியை குலைக்க நடக்கும் முயறசிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், இதனை  மக்களின் ஆதரவுடன் முறியடித்து, கீழக்கரையை தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக்க முயல்வதே எனது குறிகோள் ” என கூறினார்.

2 comments:

al rafee (keelai bouthiramanikkappattinam) said...

all the best
by www.roadrafee.weebly.com

MJS said...

உட்கட்சிப்பூசல்,
யாராக இருந்தாலும் சரியே மறுமைக்கு பயந்து கொள்ளுங்கள். மறைவானவற்றை அறியக்கூடியவன் இறைவன். அமானிதத்தை உண்பவனுக்கும், உண்ணத் துணை போகக் கூடியவனுக்கும் கடுமையான வேதனை காத்திருக்கிறது (இறை மொழி)
நான்கு சுவர்களுக்குள் என்று இல்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் இருதரப்பினரும் விளக்கம் கொடுங்கள் அது உங்கள் கடமை.